சென்னையில் பாதுகாப்பு பணியில் 6,500 போலீஸார்

சென்னையில் பாதுகாப்பு பணியில் 6,500 போலீஸார்

சென்னை: மெரினாவில் நாளை நடைபெறும் விமான சாகச நிகழ்ச்சியை காணமுக்கிய பிரமுகர்கள், மற்றும் லட்சக்கணக்கான பொதுமக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் 6,500 போலீஸார், 1,500 ஊர்க்காவல் படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்தார்.

விமான சாகச நிகழ்ச்சியையொட்டி போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து போலீஸார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: காமராஜர் சாலையில், காந்தி சிலை மற்றும் போர் நினைவிடம் இடையே அனுமதி சீட்டுகள் உள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

திருவான்மியூரில் இருந்து காமராஜர் சாலை வழியாக பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள், சர்தார் படேல் சாலை, காந்திமண்டபம் சாலை, அண்ணாசாலை வழியாக செல்லலாம். இதேபோல, பாரிமுனையில் இருந்து திருவான்மியூர் செல்லும் வாகனங்களும் அண்ணாசாலை, தேனாம்பேட்டை, காந்தி மண்டபம் வழியாக செல்ல வேண்டும். காமராஜர் சாலை, அண்ணாசாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, கதீட்ரல் சாலை, வாலாஜா சாலையில் வணிக வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.

Related posts

புளோரிடா மாகாணத்தை பந்தாடிய மில்டன் புயல்: 9 பேர் பலி

ஆசியான் மாநாடு: முக்கிய தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி

லாவோஸ் நாட்டில் ராமாயண நாடகத்தை கண்டுகளித்த பிரதமர் மோடி