சென்னையில் போலீஸ் போல் நடித்து பணம் பறித்த வாலிபர் கைது

சென்னை மெரினா கடற்கரையில் போலீஸ் போல் நடித்து பணம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

சென்னையை அடுத்த கொட்டிவாக்கம் வேம்புலி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமரவேல் (வயது 43). 'பைக் டாக்சி' ஓட்டி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர், மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் பின்புறம் உள்ள மணல்பரப்பில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர், தன்னை போலீஸ் என்று கூறி குமரவேலை மிரட்டி அவரிடம் இருந்த செல்போன், ரூ.8 ஆயிரத்து 500 ரொக்கம், டெபிட், கிரெடிட் மற்றும் ஆதார் கார்டு ஆகியவற்றை பறித்து சென்றார்.

இதுகுறித்து குமரவேல் அளித்த புகாரின்பேரில் மெரினா குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் குமரவேலுவிடம் போலீஸ் போல் நடித்து செல்போன் மற்றும் பணம் பறிப்பில் ஈடுபட்டதாக திருப்பத்தூர் மாவட்டம் திருமால் நகரை சேர்ந்த விக்னேஷ் (26) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

விக்னேஷ் மீது திருப்பத்தூர், மதுரை, நெல்லை, கன்னியாகுமரி உள்பட 8 மாவட்டங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கைதான விக்னேஷ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Related posts

வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு

மகனை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை… குடும்பத் தகராறில் விபரீதம்

மோடி ஆட்சிதான் காமராஜர் ஆட்சி – தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி