சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை சீரானது

சென்னையில் தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த மெட்ரோ ரெயில் சேவை சீரானது.

சென்னை,

சென்னையில் தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த மெட்ரோ ரெயில் சேவை தற்போது சீராகியுள்ளது. முன்னதாக கடந்த ஒரு மணிநேரத்திற்கும் மேலாக தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, நீலம் மற்றும் பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டது.

சென்ட்ரல் மெட்ரோ மற்றும் பசுமை வழித்தடத்தில் உள்ள விமான நிலையம் இடையேயான நேரடி மெட்ரோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனை சரிசெய்யும் பணியில் மெட்ரோ நிர்வாகம் ஈடுபட்டு வந்தது.

இந்த நிலையில் தொழில்நுட்பக் கோளாறு தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது. நீலம் மற்றும் பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவைகள் வழக்கம் போல் இயங்கத் தொடங்கியுள்ளன. மேலும், சென்ட்ரல் மெட்ரோ மற்றும் பசுமை வழித்தடத்தில் உள்ள விமான நிலையம் இடையேயான நேரடி மெட்ரோ ரெயில் சேவையும் மீண்டும் தொடங்கப்பட்டது.

சேவை பாதிப்பால் ஏற்பட்ட அசவுகரியத்துக்கு வருந்துவதாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

"The technical glitch has been rectified. Metro Train services in blue line and green Line have resumed normal operations. We apologize for any inconvenience caused."

— Chennai Metro Rail (@cmrlofficial) August 18, 2024

Related posts

கேரள நபருக்கு புதிய வகை குரங்கு அம்மை: நாட்டில் முதல் முறை; கண்காணிப்பு தீவிரம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 492-ஆக உயர்வு!

சென்னை உள்பட தமிழகத்தில் 14 இடங்களில் என்ஐஏ சோதனை