சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 70 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்ப்பட்டுள்ளன

சென்னை,

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே கேஸ் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துவிட்டது. இதனையடுத்து மாதத்திற்கு இரண்டு முறை இந்நிறுவனங்கள் கேஸ் விலையை தீர்மானிக்கும். அந்த வகையில் தற்போது வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டிருக்கிறது

சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 70 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்ப்பட்டுள்ளன.இதன் மூலம் சென்னையில் இன்று முதல் சிலிண்டர் விலை 1,840 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி 818 ரூபாய் 50 காசுகள் என்ற நிலையில் நீடிக்கிறது.

Related posts

பல பெண்களுடன் தொடர்பு… தட்டிக் கேட்ட காதலிக்கு சரமாரி அடி – வாலிபர் கைது

மதுரை புத்தக திருவிழாவில் மாணவிகள் சாமியாடிய சம்பவம் – அமைச்சர் மூர்த்தி விளக்கம்

விஜய்யின் த.வெ.க. மாநாடு – இன்று தேதி அறிவிப்பு