சென்னையில் 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் – வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு காணப்படுவதால், தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தமிழகத்தின் சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னையில் மழை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு, மத்திய மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ., வேகத்திலும்; அவ்வப்போது 55 கி.மீ., வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வு நியாயமாக இருக்க வேண்டும்: பொதுக்குழு கூட்டத்தில் கமல்ஹாசன் பேச்சு

மாமியார் தலையில் கல்லை போட்டு கொன்ற மருமகள்… கரூரில் பயங்கரம்

சென்னை கடற்கரை – தாம்பரம் மின்சார ரெயில் சேவை நாளை ரத்து