சென்னையில் 5 சுரங்கப் பாதைகள் மூடல்! தற்போதைய போக்குவரத்து நிலவரம்

சென்னையில் தற்போதைய போக்குவரத்து நிலவரம் குறித்து போக்குவரத்து காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று கனமழையும், நாளையும் அதி கனமழையும்(சிவப்பு எச்சரிக்கை) பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதன்படி, சென்னையில் நேற்று இரவு முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் பல சாலைகளில் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க | தவெக மாநாடு திட்டமிட்டபடி நடைபெறுமா?

இந்நிலையில் மழைநீர் வெள்ளம் காரணமாக மூடப்பட்டுள்ள சுரங்கப் பாதைகள், வெள்ளம் சூழ்ந்துள்ள சாலைகள் குறித்து போக்குவரத்து காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

மூடப்பட்டுள்ள சுரங்கபாதைகள்

பெரம்பூர் ரயில்வே சுரங்கப்பாதை

கணேசபுரம் சுரங்கப்பாதை

சுந்தரம் பாயின்ட் சுரங்கப்பாதை

துரைசாமி சுரங்கப்பாதை

மேட்லி சுரங்கப்பாதை

மழைநீர் தேங்கியுள்ளதால் கீழ்கண்ட சாலைகளில் போக்குவரத்து மெதுவாக செல்கின்றன

தானா தெரு

வெலிங்டன் முதல் டேம்ஸ் ரோடு

கதந்திர தின பூங்கா முதல் நாகாஸ் சந்திப்பு

டேங்க் பங்க் ரோடு

ஸ்டெர்லிங் சாலை

பெரியார் பாதை முதல் நெற்குன்றம் பாதை, வடபழனி

நீலாங்கரை சந்திப்பு முதல் நீர்லங்கரை பிஎஸ்

அண்ணா சாலை முதல் எம்ஜிஆர் சாலை வரை

பிராட்வே சந்திப்பு

பிரகாசம் சாலை

ஹைத் மஹால்

மண்ணடி மெட்ரோ

ப்ளூஸ்டார் சந்திப்பு

சிந்தாமணி

ஜயப்பன் கோயில்

நெற்குன்றம் ரயில் நகர்

மேட்டுக்குளம் முதல் தீயணைப்பு நிலையம் வரை.

பட்டுவாஸ் சாலை

ஹப்லிஸ் ஹேட்டல்

பால் வெல்ஸ் சாலை

மாற்றுப்பாதைகள்

ஐஸ் ஹவுசில் இருந்து ஜிஆர்ஹெச் சந்திப்புக்கு வரும் இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் திருவல்லிக்கேணி ஹைரோட்டை நோக்கி வலதுபுறம் திரும்பி ரத்னா கபே வழியாக ஜாம் பஜார் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, மார்க்கெட் மற்றும் ராயப்பேட்டை டவர் வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம். மேலும் மோட்டார் சைக்கிள்கள் திசை திருப்பப்படாமல் தங்கள் வழியில் செல்லலாம். ஜிஆர்ஹெச் சந்திப்பில் இருந்து ஐஸ் ஹவுஸ் வரும் வாகனங்களுக்கு மாற்றம் இல்லை.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது