சென்னை ஃபார்முலா-4 கார் பந்தயத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!

சென்னையில் ஃபார்முலா -4 கார் பந்தயம் நடத்துவதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சென்னையில் ஃபார்முலா- 4 கார் பந்தயம் நடத்த கடந்த டிசம்பர் மாதம் முடிவானது.

ஆனால், புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது ஆக. 31, செப். 1 ஆகிய இரு நாள்கள் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஆக. 31 ஆம் தேதி சனிக்கிழமை காலை ஒரு காட்சி மட்டும் மக்கள் இலவசமாக பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் தேர்தல்: காங்கிரஸ் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

இந்நிலையில் சென்னையில் ஃபார்முலா-4 கார் பந்தயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் பி.என்.எஸ்.பிரசாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று முறையிட, நாளை(புதன்கிழமை) விசாரிப்பதாக தலைமை நீதிபதி அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது.

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!