சென்னை உள்பட 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு (பகல் 1 மணி வரை) சென்னை உள்பட 6 மாவட்டங்களில் மிதமான மழை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூா், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு புதன்கிழமை (அக். 16) அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், செவ்வாய்க்கிழமை இரவு முதல் மழை படிப்படியாக குறைந்து இன்று சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகின்றது.

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரம் நோக்கிச் செல்வதால் அதி கனமழையில் இருந்து சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் தப்பித்தது.

எனினும் இந்த மாவட்டங்களில் மிதமான மழை தொடர்ந்து இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | காற்றழுத்த மண்டலம் எங்கே கரையைக் கடக்கும்? வானிலை மையம் தகவல்

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு (பகல் 1 மணி வரை) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும்

திருப்பத்தூர், திருவண்ணாமலை, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் லேசான அல்லது மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது