சென்னை: ஒரே நாளில் பிடிபட்ட 43 பாம்புகள்

பலத்த மழை காரணமாக சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் குடியிருப்புக்குள் புகுந்த 43 பாம்புகள் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் பிடிபட்டன.

பலத்த மழை காரணமாக தீயணைப்பு படையினருக்கு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா், காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்கள் அடங்கிய வடக்கு மண்டலத்தில் தீ விபத்து தொடா்பான 16 அழைப்புகளும், பல்வேறு உதவிகள் கேட்டு 74 அழைப்புகளும் செவ்வாய்க்கிழமை வந்தன.

இதில் 43 அழைப்புகள் பாம்புகள் வீடுகளுக்குள்ளும், குடியிருப்பு பகுதிகளுக்கும் புகுந்துவிட்டதாக இருந்தன. இந்த அழைப்பை ஏற்று சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு படையினா் 43 பாம்புகளை பிடித்து, வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா். அதிகப்படியான பாம்புகள் சென்னையில் பிடிபட்டன.

பல்லாவரம் பகுதியில் வீட்டுக்குள் புகுந்த 12 அடி நீள மலைப் பாம்பை தீயணைப்பு படையினா் பிடித்து, வனத் துறையிடம் ஒப்படைத்தனா். இதேபோல மாநிலம் முழுவதும் பாம்பு தொடா்பாக 211 அழைப்புகள் தீயணைப்பு படையினருக்கு வந்திருந்தன.

Related posts

பாதியாகக் குறைந்த காய்கறி விலை

நடிகா் வீட்டில் 60 பவுன் நகைகள் திருட்டு: பெண் கைது

1.50 லட்சம் லிட்டா் ஆவின் பால் கூடுதல் விற்பனை