சென்னை – காட்பாடி இடையே ‘வந்தே மெட்ரோ’ ரெயில் சோதனை ஓட்டம்

12 பெட்டிகள் கொண்ட "வந்தே மெட்ரோ" ரெயில் இயக்கப்பட உள்ளது.

சென்னை,

சென்னை கடற்கரை – காட்பாடி இடையே 12 பெட்டிகள் கொண்ட "வந்தே மெட்ரோ" ரெயில் இயக்கப்பட உள்ளது. வில்லிவாக்கம் பணிமனையில் இருந்து வந்தே மெட்ரோ ரெயில், கடற்கரை ரெயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது. அங்கிருந்து இன்று காலை சோதனை ஓட்டம் தொடங்குகிறது.

பின்னர் வில்லிவாக்கம், அரக்கோணம் வழியாக காலை 11.55 மணிக்கு காட்பாடி செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது. காட்பாடியில் இருந்து பகல் 12.15 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு சென்னை கடற்கரை வந்தடைய உள்ளது.

மணிக்கு 100 கி.மீ வேகத்தில் இந்த ரெயில் இயக்கப்பட உள்ளது. 12 பெட்டிகளைக் கொண்ட இந்த ரெயில் முழுவதும் ஏசி வசதி செய்யப்பட்டது. சொகுசு இருக்கைகள், கண்காணிப்பு கேமரா, நவீன கழிவறைகளை கொண்டிருக்கும். ஒரு பெட்டியில் 104 பேர் அமர்ந்தும், 200 பேர் நின்று கொண்டும் பயணிக்கலாம்.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்