‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ திரைப்படம்: கதாபாத்திரங்களின் அறிமுக போஸ்டர் வெளியீடு

'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' திரைப்படத்தில் சுனில் ரெட்டி மற்றும் மணிகண்டனின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

சென்னை,

சென்னை 28, சரோஜா, கோவா படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடித்தவர் வைபவ். பின்னர், 'கப்பல், மேயாத மான்' போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். தற்போது விஜய் நடிப்பில் வெளியாகி உள்ள 'தி கோட்' திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதை தொடர்ந்து நடிகர் வைபவ், 'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இணைந்து இயக்கியுள்ளனர். இப்படத்தில் அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளார். மொட்ட ராஜேந்திரன், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, ஆனந்த் ராஜ், இளவரசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். இது நகைச்சுவை படமாக உருவாகியுள்ளது.

இதற்கிடையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. படக்குழு படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்களில் அறிமுக போஸ்டர்களை வெளியிட்டு வருகிறது.

நடிகர் வைபவ் 'பாண்டி' கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் மொட்ட ராஜேந்திரன், ஜான் விஜய் மற்றும் ஆனந்த் ராஜ் ஆகியோரின் கதாப்பாத்திரத்தின் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

தற்பொழுது சுனில் ரெட்டி மற்றும் மணிகண்டனின் கதாப்பாத்திர போஸ்டர்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பூச்சி மற்றும் குடி குமார் என்ற கதாப்பாத்திரத்தில் இருவரும் நடித்துள்ளர். கதாப்பாத்திரத்தின் பெயர் மிகவும் வித்தியாசமாக நகைச்சுவையாகவும் இருக்கிறது.

Meet our beloved Poochi, namma Pandi oda jigiru dhosthu ! @Mani_Rajeshh ready for a hilarious ride as these two bring loads of laughs and excitement to the screen. Don’t miss out our #ChennaicitygangstersAn @immancomposer musical.@BTGUniversal@bbobby@ManojBeno… pic.twitter.com/eTOamehppb

— BTG Universal (@BTGUniversal) September 8, 2024

திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு காமெடிப் படமாக உருவாகியுள்ளது. திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Original Article

Related posts

சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

வேட்டையன்: பகத் பாசிலின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு

எமர்ஜென்சி ரிலீஸ்: தணிக்கை வாரியத்துக்கு கெடு விதித்த மும்பை உயர்நீதிமன்றம்!