சென்னை – செங்கல்பட்டு மின்சார ரெயில் சேவையில் மாற்றம்

சென்னை எழும்பூர் – விழுப்புரம் மார்க்கத்தில், செங்கல்பட்டு பணிமனையில் பொறியியல் பணி நடக்க உள்ளதால், மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

சென்னை,

சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரை இயக்கக்கூடிய மின்சார ரெயில்கள் சென்னைக்கு மிக முக்கிய போக்குவரத்து சேவையாக உள்ளது. சென்னை புறநகர் மற்றும் சென்னை உள்பகுதிகளை இணைக்க கூடிய போக்குவரத்து சேவையாக இருப்பதால், தினமும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் ரெயில் போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர்.

இந்த நிலையில், சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையிலான மின்சார ரெயில் சேவை இன்று மற்றும் ஜூன் 4 ஆகிய தேதிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது. சென்னை எழும்பூர் – விழுப்புரம் மார்க்கத்தில், செங்கல்பட்டு பணிமனையில் பொறியியல் பணி நடக்க உள்ளதால், மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

அதன்படி, சென்னை கடற்கரை – செங்கல்பட்டுக்கு காலை 9.30, 10.56, 11.40, 12.40 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரெயில்கள், சிங்கபெருமாள்கோவில் வரை மட்டுமே செல்லும். அதேபோல, செங்கல்பட்டு – சென்னை கடற்கரைக்கு முற்பகல் 11.30, மதியம் 1.00, 1.45, பிற்பகல் 3.05 ஆகிய நேரங்களில் புறப்பட வேண்டிய மின்சார ரெயில்கள், சிங்கபெருமாள்கோவிலில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சீனாவில் திருமணம் செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை கடும் சரிவு

மும்மொழி கொள்கையைத் திணிப்பதுதான் திராவிட மாடலா? சீமான் கண்டனம்

சபரிமலையில் நேரடி முன்பதிவு மூலமாக தினமும் 10,000 பேர் அனுமதி!