சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: மூதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அமெரிக்கா பயணம் மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை சென்னை திரும்பினார்.

தமிழகத்துக்கு முதலீடுகளை ஈா்க்கும் வகையில், அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ, சிகாகோ ஆகிய நகரங்களுக்கு முதல்வா் பயணம் மேற்கொண்டாா். அங்கு பல்வேறு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

ரூ.7,618 கோடி முதலீடுகள் ஈா்ப்பு

அமெரிக்கப் பயணத்தின் போது, இதுவரை 18 முன்னணி நிறுவனங்களுடன் ரூ.7,618 கோடி முதலீட்டுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், உலகளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உயா் அலுவலா்களைச் சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி ஐஐஐடியில் இன்று 6-ஆவது பட்டமளிப்பு விழா

இதன் மூலம் தமிழகத்தில் 11,516 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை திரும்பினார் முதல்வர்

தமிழகத்துக்கு முதலீடுகளை ஈா்ப்பதற்கான 17 நாள் அரசுமுறை அமெரிக்கா பயணங்களை முடித்துக்கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னைை திரும்பினார்.

சென்னை விமான நிலையம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அரசு சார்பிலும், திமுக சார்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

Related posts

ஜோ பைடனை சந்தித்தார் பிரதமர் மோடி!

அரிய நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி!

ம.நீ.ம. தலைவராக மீண்டும் கமல்ஹாசன்- முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து