சென்னை பாரிமுனை காளிகாம்பாள் கோவில் பூசாரி ஜாமீன் மனு தாக்கல்

ஜாமீன் வழங்க கோரி கோவில் பூசாரி கார்த்திக் முனுசாமி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்

சென்னை,

சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி பெண் ஊழியர் ஒருவர் பாரிமுனையில் உள்ள உள்ள கோவில் பூசாரி கார்த்திக் முனுசாமி மீது பாலியல் புகார் அளித்திருந்தார்..இது தொடர்பாக விருகம்பாக்கம் மகளிர் போலீசார் பூசாரி கார்த்திக் முனுசாமி மீது பாலியல் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து பூசாரி கார்த்திக் முனுசாமியை கோவில் நிர்வாகம் சஸ்பெண்டு செய்தது. தலைமறைவான அவரை போலீசார் தேடி வந்தனர். மேலும் அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீசும் வழங்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் கொடைக்கானலில் தலைமறைவாக இருந்த பூசாரி கார்த்திக் முனுசாமியை நேற்று போலீசார் கைது செய்தனர். பூசாரி கார்த்திக் முனுசாமி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் , தனக்கு ஜாமீன் வழங்க கோரி பூசாரி கார்த்திக் முனுசாமி சென்னை மாவட்ட முதன்மை bஅமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தனக்கு எதிராக புகார் அளித்த பெண்ணிடம் சமரசம் ஏற்பட்டுள்ளதால் உடனடியாக ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் கார்த்திக் முனுசாமி தெரிவித்துள்ளார்.

Related posts

மேஷம் முதல் மீனம்: தினப்பலன்கள்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான சீசிங் ராஜா என்கவுன்டர்!

நாளைமுதல் 2 மண்டலங்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்