சென்னை புறநகர் ரயில் சேவையில் நாளை மாற்றம்!

சென்னை புறநகர் ரயில் சேவை அட்டவணையில் சனிக்கிழமை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில், பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் மற்றும் பெரும்பாலான தனியார் நிறுவனங்களுக்கு ஞாயிறு வரை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதனால், வழக்கத்தைவிட பயணிகளின் எண்ணிக்கை நேற்றும் இன்றும் குறைவாகவே காணப்பட்டது.


இதையும் படிக்க :நெல்லை, குமரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்! 25 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு

இந்த நிலையில், நாளை(அக். 2) சென்னை – அரக்கோணம், சென்னை – சூலூர்பேட்டை, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் அனைத்தும் ஞாயிற்றுக் கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழ்நாடு நாள்– தவெக தலைவர் விஜய் வாழ்த்து

ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் அசத்தல்! நியூசிலாந்து 235-க்கு ஆல் அவுட்!

இந்தியா-சீனா எல்லையில் வீரர்களின் ரோந்துப் பணி தொடங்கியது!