சென்னை புறநகர் ரயில் சேவை அட்டவணையில் வியாழக்கிழமை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில், பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் மற்றும் பெரும்பாலான தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : சென்னை கால்பந்து திடல்களை தனியாா்மயமாக்கும் தீர்மானம் வாபஸ்!
இதனால், வழக்கத்தைவிட பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் என்பதால், நாளை(அக். 31) ஞாயிற்றுக் கிழமை அட்டவணைப்படி, அனைத்து புறநகர் மின்சார ரயில்களும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.