சென்னை | மருந்தாளுநர் பணி: டி.பார்ம் படித்தவர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை | மருந்தாளுநர் பணி: டி.பார்ம் படித்தவர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: அரசு மருத்துவமனைகளில் காலியாக இருந்த மருந்தாளுநர்கள் பணியிடங்களுக்கு, பி.பார்ம்பட்டதாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கு, டி.பார்ம் (பட்டய மருந்தாளுநர்) படித்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அனைத்து பட்டய மருந்தாளுநர் ஒருங்கிணைப்பு குழு சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அப்போது, குழு நிர்வாகிகள் கூறியதாவது: கடந்த 2019-ம் ஆண்டுக்கு முன்பு வரை, அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுநர் பணியிடத்துக்கு டி.பார்ம் படித்தவர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு வந்தனர். பின்னர், அரசாணையில் மாற்றம் செய்து, பி.பார்ம் படித்தவர்களும் நியமிக்கப்படுகின்றனர்.

தற்போது, தேர்வு செய்யப்பட்டுள்ள 986 மருந்தாளுநர் பணியிடங்களில், 5 சதவீதம்கூட டி.பார்ம் படித்தவர்கள் இல்லை. பி.பார்ம் படித்தவர்களுக்கு பல வேலைவாய்ப்புகள் உள்ளன. ஆனால், டி.பார்ம் படிப்புக்கு மருந்தாளுநர் பணியிடம் மட்டுமே இருப்பதால், அரசாணையை திருத்தி,அரசு மருந்தாளுநர் பணியிடங்களில் டி.பார்ம் படித்தவர்களை அதிகம் நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related posts

கோடியக்கரை அருகே கடலில் தவறி விழுந்த தரங்கம்பாடி மீனவர் மாயம்

“நீர்நிலைகளை தனியாருக்கு தாரைவார்ப்பதா?” – தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம் 

நடிகர் விஜய்யை அதிமுகவினர் யாரும் விமர்சிக்க வேண்டாம்: நிர்வாகிகளுக்கு பழனிசாமி அறிவுறுத்தியதாக தகவல்