சென்னை மாநகராட்சியின் 200 கவுன்சிலர்களுக்கு மேயர் பிரியா டேப்லட் கருவிகளை வழங்கினார்.
சென்னை,
சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் அனைவருக்கும் டேப்லட் கருவிகள் வழங்கப்படும் என கடந்த சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று சென்னை மாநகராட்சியின் 200 கவுன்சிலர்களுக்கு மேயர் பிரியா டேப்லட் கருவிகளை வழங்கினார்.
அதோடு கவுன்சிலர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு மதிய விருந்தாக பிரியாணி வழங்கப்பட்டது. சமீபத்தில் பெய்த கனமழையின்போது வெள்ள நீரை விரைவாக வெளியேற்றுவதில் மாநகராட்சி நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியதையடுத்து இந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.