சென்னை மாநகராட்சி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி

சென்னை,

சென்னை மாநகராட்சி தரப்பில் குப்பை சேகரிப்பிற்கு மட்டுமின்றி, பல்வேறு பணிகளுக்காக 2,886 வாகனங்கள் உள்ளன. அந்த வாகனங்களின் டிரைவர்கள் சிலர் பணியில் இருப்பதாக கையெழுத்து போட்டுவிட்டு, சொந்த வேலைகளுக்கு சென்றுவிடுவதால் பணிகள் முடக்கம் என புகார் எழுந்தது.

இதையடுத்து, சென்னை மாநகராட்சி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தி கண்காணிக்க அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, குப்பை லாரிகள், பொக்லைன், மெக்கானிக் ஸ்வீப்பர் உள்ளிட்ட வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் தற்போது நடந்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் புதிய கமிஷனர் போட்ட ஸ்ட்ரிக்ட் உத்தரவு#chennaicorporation#kumarakuruparaniaspic.twitter.com/ss7uyeFwtd

— Thanthi TV (@ThanthiTV) August 5, 2024

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்