சென்னை மாநகர சுகாதார மைங்களில் வேலை வேண்டுமா? 140 காலியிடங்கள்

சென்னை பெருநகர சுகாதார மையங்களில் காலியாக உள்ள மருத்துவ அலுவலர், செவிலியர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 6 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் இதர விவரங்கள் குறித்து பார்ப்போம்:

பணி: Medical Officer

காலியிடங்கள்: 30

சம்பளம்: மாதம் ரூ. 60,000

தகுதி: மருத்தவத் துறையில் எம்பிபிஎல் தேர்ச்சி பெற்று தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Staff Nurse

காலியிடங்கள்: 32

சம்பளம்: மாதம் ரூ. 18,000

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் செவிலியர் பிரிவில் டிப்ளமோ அல்லது இளநிலை செவிலியர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

பணி: Multi purpose Health Worker

காலியிடங்கள்: 12

சம்பளம்: மாதம் ரூ. 14,000

தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் சுகாதார ஆய்வாளர் பணி மற்றும் சானிட்டரி இன்ஸ்பெக்டர் படிப்புக்கான இரண்டு ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Support Staff

காலியிடங்கள்: 66

சம்பளம்: மாதம் ரூ. 8,500

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 50-க்குள் இருக்க வேண்டும்.

குரூப்-2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Office of the Member Secretary,(CCUHM), City Health Department, Amma Maligai, Greater Chennai Corporation, Ripon Buildings, Chennai-3

விண்ணப்பங்கள் வந்து சேர் கடைசி நாள்: 6.9.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக்செய்து தெரிந்துகொள்ளவும்.

Related posts

கேரள நபருக்கு புதிய வகை குரங்கு அம்மை: நாட்டில் முதல் முறை; கண்காணிப்பு தீவிரம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 492-ஆக உயர்வு!

சென்னை உள்பட தமிழகத்தில் 14 இடங்களில் என்ஐஏ சோதனை