சென்னை மெட்ரோ ரயிலில் செப்டம்பரில் மட்டும் 92.77 லட்சம் பேர் பயணம்!

சென்னை மெட்ரோ ரயிலில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் 92.77 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயிலில் ஆகஸ்டு மாதத்தில் 95,43,635 போ் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

மெட்ரோ ரயிலில் பயணிப்பவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மெட்ரோ ரயில் நிறுவனம் பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது.

இதையும் படிக்க | ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ – 3 சட்ட முன்வரைவுகளைக் கொண்டுவர முடிவு! சாத்தியமா?

இதன்படி, மெட்ரோ ரயிலில் நிகழாண்டு ஜனவரி மாதத்தில் 84,63,384 பேரும், பிப்ரவரி மாதத்தில் 86,15,008 பேரும், மாா்ச் மாதத்தில் 86,82,457 பேரும் பயணம் செய்துள்ளனா்.

தொடா்ந்து ஏப்ரலில் 80,87,712 பேரும், மே மாதத்தில் 84,21,072 பேரும், ஜூன் மாதத்தில் 84,33,837 பேரும், ஜூலை மாதத்தில் 95,35,019 பேரும் மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் 95,43,625 பேரும் செப்டம்பர் மாதத்தில் 92,77,697 பேரும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனா்.

இதில், அதிகபட்சமாக செப். 6-ஆம் தேதி ஒரு நாளில் மட்டும் 3,74,087 பேர் பயணித்துள்ளனர்.

எனினும் செப்டம்பர் மாதத்தைவிட ஆகஸ்டில் 2,65,928 பேர் அதிகம் பயணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2024, ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 30,99,397 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 7,319 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 7,149 பயணிகள், க்யூஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 40,73,640 பயணிகள் மற்றும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 20,90,192 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), வாட்ஸ்அப் டிக்கெட், பேடிஎம் செயலி(Paytm App) மற்றும் போன்பே(PhonePe) போன்ற அனைத்து வகையாக பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் பேடிஎம் செயலி மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பிளேயிங் லெவனில் இடம்பெற கே.எல்.ராகுல், சர்ஃபராஸ் இடையே போட்டி: இந்திய அணி பயிற்சியாளர்

அமெரிக்க அதிபர் தேர்தல்: தமிழ் உள்பட இந்திய மொழிகளில் வழிமுறைகள்

சென்னையில் ‘இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டம்’ – பெண்கள் விண்ணப்பிக்கலாம்!