சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மட்டும் ஏன் நிதி கிடையாது?

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மட்டும் ஏன் நிதி கிடையாது? மத்திய அரசு விளக்கம்

சென்னை மெட்ரோ ரயில்

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் விமான நிலையம் – விம்கோ நகர், சென்ட்ரல்- பரங்கிமலை ஆகிய இரண்டு வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு முதற்கட்ட மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து தற்போது 3 வழித்தடங்களில் 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணி நடைபெற்று வருகிறது. ஆனால், 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளுக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு தாமதம் செய்து வருவதாக தமிழ்நாடு அரசு குற்றம்சாட்டி வருகிறது

விளம்பரம்

இந்த நிலையில், மக்களவையில் பேசிய திமுக எம்.பி. தயாநிதி மாறன், மெட்ரோ ரயில் திட்டப்பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி குறித்தும், திட்டத்தின் தற்போதைய நிலை குறித்தும் கேள்வி எழுப்பினார்.இதற்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் தொகன் சாஹூ எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.

அதில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது. டெல்லி- காசியாபாத்- மீரட் இடையேயான மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 43,431 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பெங்களூருவுக்கு 7,658 கோடி ரூபாயும், மும்பைக்கு 4,402 கோடி ரூபாய் நிதியும் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரத் நகர மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 3,961 ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. டெல்லிக்கு 3,305 கோடியும், கான்பூருக்கு 2,629 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Also Read :
தமிழக விஞ்ஞானி வீர முத்துவேல் உட்பட 33 பேருக்கு ராஷ்ட்ரீய விஞ்ஞான் புரஸ்கார் விருது அறிவிப்பு !

அகமதாபாத் திட்டத்திற்கு 2,596 கோடி ரூபாய் மற்றும் பாட்னாவிற்கு 1176 கோடி ரூபாயை மத்திய அரசு அளித்துள்ளது. ஆக்ரா, இந்தூர், நாக்பூர், புனே, போபால், கொச்சி நகர மெட்ரோ திட்டங்களுக்கும் தேவையான நிதியை மத்திய அரசு கொடுத்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை, 118.9 கிலோமீட்டர் நீளத்துக்கு, 63,246 கோடி ரூபாய் மதிப்பில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தை தமிழ்நாடு அரசு முன்மொழிந்ததாக தொகன் சாஹூ கூறியுள்ளார். இத்தகைய அதிக செலவு மிகுந்த திட்டங்களுக்கான ஒப்புதல், சாத்தியக்கூறுகளின் அடிப்படையிலும், மூலப்பொருட்கள் கிடைக்கும் அளவின் அடிப்படையிலுமேயே வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில், சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டமானது மாநில அரசின் திட்டம் எனவும், இத்திட்டத்துக்கான மொத்த செலவும் தமிழ்நாடு அரசுடையது என்றும் மத்திய இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.

Related posts

விடைத்தாள் மதிப்பீட்டு முறையில் புதிய மாற்றம் – டி.என்.பி.எஸ்.சி. முடிவு

திரைக்கதிர்

அவல் லாடு