சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி,

மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்திற்கு ரூ.63,246 கோடி ஒதுக்கீடு நிதியை ஒதுக்க மத்திய அமைச்சரை ஒப்புதல் அளித்துள்ளது.

வேகமாக வளர்ந்து வரும் நகரமான சென்னை மிக முக்கியமான பொருளாதார மையமாகும். நகரத்திற்கு தேவையான உள்கட்டமைப்பை உருவாக்குவது மிகவும் முக்கியம். பொருளாதார மையமாக சென்னை உள்ளதால் ஒரு விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. 118 கிலோ மீட்டர் நீளத்திற்கு 128 மெட்ரோ நிலையங்கள் அமையும் வகையில் மெட்ரோ 2-ஆம் கட்டம் செயல்படுத்தப்பட உள்ளது" என்றார்.

அண்மையில் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதல் அமைச்சர் முக ஸ்டாலின் மெட்ரோ திட்டத்திற்கு நிதி கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் 2-வது நாளாக போக்குவரத்து நிறுத்தம்: தமிழக, கேரள பயணிகள் பாதிப்பு

வானிலை முன்னெச்சரிக்கை: அரசின் ‘TN-Alert’ செயலி அறிமுகம்

தமிழகத்தில் 14 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம்