சென்னை: 22 ஆண்டுகளுக்கு பின் செப்டம்பரில் உச்சம் தொட்ட வெப்பம்! -தமிழ்நாடு வெதர்மேன்

சென்னையிலும் மதுரையிலும் பல ஆண்டுகளுக்கு பின் செப்டம்பர் மாதம் கடும் வெப்பம் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் பரவலாக கடந்த சில நாள்களாக வெய்யில் வாட்டி வதைக்கிறது.

இந்த நிலையில், சென்னையில்செப்டம்பரில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆராய்ச்சியாளர் தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 2002, செப்டம்பரில் சென்னையில் அதிகபட்ச வெப்பநிலையாக 39.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தது. அதன்பின், சுமார் 22 ஆண்டுகளுக்கு பின் செவ்வாய்க்கிழமை(செப். 17) 39.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Chennai AP records its hottest September day ever at 39.2 C. It equals the record set in 2002
1. 39.2 – 18.09.2024
2. 39.2 – 28.09.2002
3. 38.6 – 05.09.1972
4. 38.4 – 16.09.2024
5. 38.3 – 04.09.2004
6. 38.1 – 03.09.1968
7. 38.0 – 26.09.2002

— Tamil Nadu Weatherman (@praddy06) September 17, 2024

அதேபோல மதுரையில் நிகழாண்டு செப்டம்பரில்(செப். 17) இதுவரை இல்லாத அளவுக்கு 41 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்