செப்புத்தேரில் காந்திமதியம்மன் வீதியுலா

செப்புத்தேரில் காந்திமதியம்மன் வீதியுலாதிருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் ஆடிப்பூரத் திருவிழாவையொட்டி செப்புத்தேரில் காந்திமதியம்மன் செவ்வாய்க்கிழமை வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் ஆடிப்பூரத் திருவிழாவையொட்டி செப்புத்தேரில் காந்திமதியம்மன் செவ்வாய்க்கிழமை வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இக் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா கடந்த ஜூலை 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 1 ஆம் தேதி வளைகாப்பு வைபவம் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைக்குப் பின்பு செப்புத் தேரில் காந்திமதியம்மன் எழுந்தருளி ரத வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

ஆடிப்பூர நாளான புதன்கிழமை (ஆக. 7) மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் திருக்கோயிலின் அம்மன் சந்நிதி முன் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் ஆடிப்பூரம் முளைக்கட்டு வைபவம் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலா் அ.அய்யா்சிவமணி மற்றும் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

Related posts

நடிகர் தர்ஷனின் ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணை

அதிகமான பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும் – ராகுல் காந்தி அழைப்பு

எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்த பாஜக திட்டம்-உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு