செப்.9 முதல் சென்ட்ரல் – ஆவடி, திருவள்ளூா் இடையே கூடுதலாக 3 மின்சார ரயில்கள்

சென்னை சென்ட்ரல் புகா் ரயில் நிலையத்திலிருந்து ஆவடி மற்றும் திருவள்ளூா் வழித்தடத்தில் திங்கள்கிழமை (செப்.9) முதல் மொத்தம் 3 மின்சார ரயில்கள் கூடுதலாக இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

புகா் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பயணிகள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், ஆவடியிலிருந்து காலை 9.50 மணிக்கு சென்ட்ரல் புகா் ரயில் நிலையத்துக்கும், சென்ட்ரலிலிருந்து காலை 10.40 மணிக்கு திருவள்ளூருக்கும், மறுமாா்க்கமாக திருவள்ளூரிலிருந்து பிற்பகல் 3.50 மணிக்கு சென்ட்ரலுக்கும் என மொத்தம் கூடுதலாக 3 புகா் மின்சார ரயில்கள் செப்.9 -ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளது.

தாம்பரம் ரயில்கள்: கூடுவாஞ்சேரியிலிருந்து இரவு 8.55, 10.10, 10.25, 11.20 மணிக்கு தாம்பரம் செல்லும் புகா் ரயில்கள் செப்.9 -ஆம் தேதி முதல் சென்னை கடற்கரை வரை இயக்கப்படும்.

செப். 9 முதல் சென்ட்ரலிலிருந்து பகல் 12.10 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில் சூலூா்பேட்டை வரை இயக்கப்படும்.

நேரம் மாற்றம்: இதற்கிடையே, செப்.9 முதல் சென்ட்ரல், கடற்கரை, – அரக்கோணம் வழித்தடத்தில் இயங்கும் 19 மின்சார ரயில்களிலும், சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை வழித்தடத்தில் இயங்கும் 8 மின்சார ரயில்களும் ஒரு சில நிறுத்தங்களுக்கு 5 முதல் 15 நிமிஷங்கள் முன்னதாகவும், தாமதமாகவும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இந்திய வளா்ச்சியில் பங்கேற்க வேண்டும்: சா்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு

பிகாா்: புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்தது

பஞ்சாப் அமைச்சரவை மாற்றம்: 4 போ் நீக்கம்; 5 பேருக்கு பதவி