செயினை பிடித்து ரயிலை நிறுத்திய பயணி: காரணம் கேட்டு அதிர்ந்த அதிகாரி

அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய பயணி – காரணம் கேட்டு அதிர்ந்தபோன அதிகாரிகள்!

மாதிரி படம்

ஓடும் ரயிலை செயினை பிடித்து பயணி ஒருவர் நிறுத்தினார். இதற்கு காரணமாக அவர் அளித்த பதில் அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்தியாவில் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் பொது சேவை மையமாக ரயில்வே செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் சுமார் 4 கோடிக்கு அதிகமான மக்கள் ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். மக்களுக்கு சேவை அளிக்கும் வகையில் கட்டணங்கள் ஓரளவு குறைவாக இதில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

பயணிகளின் அவசர தேவைக்காக உடனடியாக ரயிலை நிறுத்தக்கூடிய வசதிகளும் உண்டு. உதாரணத்திற்கு பயணி ஒருவருக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டாலோ அல்லது ரயிலுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட நேர்ந்தாலோ ஒவ்வொரு பெட்டியிலும் வைக்கப்பட்டுள்ள செயினை பிடித்து பயணிகள் இழுக்கலாம். இதன் மூலமாக ரயில் உடனடியாக நிறுத்தப்படும்.

விளம்பரம்

மேலும் மிகப்பெரும் அசம்பாவிதங்கள் இதன் மூலம் தடுக்கப்படலாம். இந்நிலையில் தேவையற்ற காரணங்களுக்காக இந்த செயினை சமீப காலமாக பயணிகள் பயன்படுத்தி வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில் உடனடியாக சோதனை நடத்திய வடக்கு ரயில்வே அதிகாரிகள், கடந்த மாதத்தில் மட்டும் 300-க்கும் மேற்பட்டவர்களை பிடித்து அபராதம் விதித்தனர்.

மேலும் அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இவர்களில் சில பயணிகளிடம் காரணம் கேட்டபோது, அதற்கு அவர்கள் கூறிய பதில் அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விளம்பரம்

பயணி ஒருவர் கூறுகையில், ‘நான் நிறைய லக்கேஜ் கொண்டு வந்துள்ளேன். குடும்பத்தினர் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இதனால் கூட்டத்திற்கு மத்தியில் என்னுடைய லக்கேஜ்களை ரயில் நிலையத்தில் இறக்க முடியாது. எனவேதான் செயினை பிடித்து ரயிலை நிறுத்தினேன். அபராதமாக நான் செலுத்தும் தொகை ரயில் நிலையத்தில் இறங்கினால் ஆகும் செலவைவிட குறைவானது. எனவே தான் நான் செயினை பிடித்து இழுத்தேன்’ என்றார்.

இன்னொரு பயணி இரவு நேரத்தில் ரயில் நிற்கும் நிலையத்திலிருந்து தனது கிராமம் மிகத் தொலைவில் இருப்பதாகவும் எனவே கிராமத்திற்கு அருகே இறங்க வேண்டும் என்பதற்காக செயினை பிடித்து இழுத்ததாகவும் கூறியுள்ளார். இது போன்ற சில பயணிகள் அளித்த பதில்கள் ரயில்வே அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

விளம்பரம்இதையும் படிங்க – முக்கிய இலாக்காக்களை குறிவைக்கும் சந்திரபாபு நாயுடு, நிதீஷ் குமார்! எந்தெந்த துறைகள் தெரியுமா?

போதிய காரணமின்றி அலாரம் சங்கிலியை இழுக்க வேண்டாம் என இந்திய ரயில்வே பயணிகளை கேட்டுக் கொண்டுள்ளது. இதனால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதுடன் சரியான நேரத்தில் ரயில் சென்று சேருவதில்லை. இது தவிர, செயின் இழுப்பதால், மாணவர்கள் தேர்வெழுதுவதும், நோய்வாய்ப்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் போவதும் பலமுறை ஏற்படுகிறது.

ரயில்வே சட்டத்தின் கீழ், காரணம் இல்லாமல் சங்கிலி இழுத்தால், 6 மாதம் முதல் 1 வருடம் வரை தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Indian Railways
,
Railway

Related posts

பெங்களூருவில் அதிர்ச்சி: இளம்பெண் உடல் 30 துண்டுகளாக பிரிட்ஜில் இருந்த கொடூரம்

“ஏழுமலையானே என்னை மன்னித்துவிடு…” – பவன் கல்யாண் பதிவு

காவல் நிலையங்களில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: நவீன் பட்நாயக்