செய்திகள் சில வரிகளில்……

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.

சென்னை,

* தமிழ்நாட்டின் வளர்ச்சியில் எப்போதும் ஆர்வம் கொண்டவர் கருணாநிதி என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

* கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட சென்னை வந்தடைந்தார் மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங்.

* யு.பி.எஸ்.சி.க்கு பதில் ஆர்.எஸ்.எஸ். மூலம் அதிகாரிகளை நியமனம் செய்கிறார் பிரதமர் மோடி என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

* போலி அமெரிக்க டாலரை இந்திய ரூபாயாக மாற்றி மோசடி செய்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

* துவரிமான் – மேலக்கால் சந்திப்பில் நான்கு வழிச்சாலையில் மேம்பாலமும், சுரங்கப்பாதையும் அமைக்க ரூ 46.09 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு ரஷியா முன்வந்த நிலையில் உக்ரைனின் தாக்குதலால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

* நாடு முழுவதும், ஒரே நாளில் 30 ஷாப்பிங் மால்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

* மகளிர் உரிமைத் தொகை கோரி தற்போது விண்ணப்பிக்க தேவையில்லை என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

* தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவராக முன்னாள் டி.ஜி.பி. சுனில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

* 370ஐ நீக்கிய மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவோம் என உமர் அப்துல்லா கூறியுள்ளார்.

* தமிழகத்தில் குரங்கம்மை நோய் தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

* 2-வது டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய தென் ஆப்பிரிக்கா அணி.

Related posts

கேரள நபருக்கு புதிய வகை குரங்கு அம்மை: நாட்டில் முதல் முறை; கண்காணிப்பு தீவிரம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 492-ஆக உயர்வு!

சென்னை உள்பட தமிழகத்தில் 14 இடங்களில் என்ஐஏ சோதனை