செய்திகள் சில வரிகளில்……

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.

சென்னை,

* புதிதாக 12 தொழில் வழித்தடங்கள் அமைக்க மத்திய மந்திரி சபை இன்று ஒப்புதல் அளித்து உள்ளது.

* மருத்துவ மாணவி கொலை செய்யப்பட்டதை கண்டித்து இன்று பா.ஜ.க நடத்திய முழுஅடைப்பால் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டது.

* பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளார்.

* தமிழகத்தில் 2 புதிய வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. இதனை பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் 31-ந் தேதி தொடங்கிவைக்கிறார்.

* 90.52 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 150 புதிய பேருந்துகளின் இயக்கத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

* பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

* இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு நடத்திய தாக்குதலுக்கு பின்னர், மேற்கு கரை பகுதியில் இதுவரை 600 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.

* போட்டியின் போது மைதானத்தில் மயங்கி விழுந்த உருகுவே கால்பந்து வீரர் ஜுவான் ஸ்கியர்டோ உயிரிழந்துள்ளார்.

* புதிய கல்விக் கொள்கையின் கீழ் வந்தால் மட்டுமே நிதி கிடைக்கும் என மத்திய அரசு தெரிவிப்பதாக தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

* பணமோசடி வழக்கில் ஹேமந்த் சோரனின் உதவியாளரான பிரேம் பிரகாஷுக்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

* 3வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் தொடரை முழுமையாக கைப்பற்றியது.

Related posts

அமித் ஷா மீது குற்றச்சாட்டா? கனடா தூதருக்கு மத்திய அரசு சம்மன்

Pune: MVA Backs Independent Bapu Bhegade, Fields No Candidate In Maval Assembly Constituency Against NCP’s Incumbent MLA Sunil Shelke

Video: Man Assaults Woman In Greater Noida, Pulls Her Hair And Hits Her As Residents Step In; Police Respond