செவிலியர்களுக்கு ‘ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது’: குடியரசுத் தலைவர் வழங்கினார்!

சமூகத்திற்கான கடமை மற்றும் சேவையில் சிறந்த அர்ப்பணிப்புக்காக 15 செவிலியர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புதன்கிழமை விருது வழங்கினார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், செவிலியர்களுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா, இந்தப் பாராட்டு செவிலியர்களுக்கு பொது சேவை பணியாற்ற ஊக்குவிக்கும் என்றும், செவிலியர்கள் "சுகாதாரத் துறையின் முதுகெலும்பு" என்றும் கூறினார்.

தாமதமாக வெளியான கடைசி உலகப் போர் பட டிரைலர்!

தேசிய ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது, 1973 ஆம் ஆண்டு இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால், செவிலியர்கள், சமூகத்திற்கு ஆற்றிய சிறந்த சேவைகளுக்கான அங்கீகாரத்தின் அடையாளமாக உருவாக்கப்பட்டது.

மத்திய, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணிபுரியும் சிறந்த செவிலியர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

மருத்துவமனை அல்லது சமூக அமைப்புகள், கல்வி அல்லது நிர்வாக அமைப்பில் வழக்கமான வேலையில் இருக்கும் செவிலியர் தேசிய ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதுக்கு தகுதியானவர்.

செவிலியர்களுக்கு விருதுடன், சான்றிதழ், ரூ.1,00,000 ரொக்கப் பரிசு மற்றும் பதக்கம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

பொங்கல் விடுமுறை: ரயில் முன்பதிவு இன்று(செப். 12) தொடக்கம்!

Related posts

2025-இல் இந்தியாவில் க்வாட் மாநாடு: பிரதமர் மோடி

திருப்பதி லட்டு விவகாரம்: ஜெகன்மோகன் ரெட்டி வீட்டை முற்றுகையிட்ட பாஜகவினர் கைது

திருப்பதி லட்டு விவகாரம்.. சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்