செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்றவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பரிசு!

செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம்பிடித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசுத்தொகை வழங்கிப் பாராட்டினார்.

ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடாபெஸ்ட்டில் இந்தமாதம் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் என்ற இரண்டு பிரிவிலும் தங்கப் பதக்கம் வென்றனர்.

இந்தப் பிரிவில் தமிகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட்மாஸ்டர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி மற்றும் அணியின் தலைவரான ஸ்ரீநாத் நாராயணன் ஆகியோருக்கு ஊக்கத்தொகையாக மொத்தம் ரூ.90 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு தலா ரூ.25 லட்சத்திற்கான ஊக்கத்தொகை, அணியின் தலைவர் ஸ்ரீநாத் நாராயணனுக்கு ரூ.15 லட்சத்திற்கான காசோலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி பாராட்டினார்.

மேலும் முதல்வர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிக்கையில், “அந்த வகையில், ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடாபெஸ்ட்டில் செப்டம்பர் 10 முதல் 23 வரை நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் என்ற இரண்டு பிரிவிலும் தங்கப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த செஸ் கிராண்ட்மாஸ்டர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா மற்றும் வைஷாலி ஆகியோருக்கு தலா 25 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகையாகவும், அணியின் தலைவரான ஸ்ரீநாத் நாராயணன் அவர்களுக்கு 15 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், என மொத்தம் 90 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை தமிழ்நாடு முதல்வர் அவர்கள் வழங்கி, வாழ்த்தி, அடுத்து வரும் குளோபல் செஸ் லீக் போட்டிகளில் வெற்றி பெற்று நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, செஸ் விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் பெற்றோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!