செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்று இந்தியா வரலாற்று சாதனை!

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

செஸ் ஒலிம்பியாட்

ஹங்கேரி தலைநகா் புடாபெஸ்டில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 193 அணிகள் பங்கேற்கும் ஓபன் பிரிவில் இந்திய அணிகள் அசத்தி வந்தன. 10வது சுற்றின் முடிவில் இந்தியா 2.5-1.5 என்ற கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தியது. இந்தியாவின் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியின் வெற்றியாளர் டி குகேஷ், ஃபேபியானோ கருவானாவை 1-0 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றார்.

முன்னதாக, இந்திய ஆடவர் அணி தொடர்ச்சியாக 8 சுற்றுகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில், 9 சுற்றில் டிராவில் முடிந்தது. 10 சுற்று முடிவில் 19 புள்ளிகளுடன் இந்தியா புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்தது.

இன்று (செப்டம்பர் 22) நடைபெற்ற இறுதிச் சுற்றுக்கானப் போட்டியில் ஸ்லோவேனியா அணிக்கு எதிரானப் போட்டியில் ஸ்லோவேனியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியை இந்திய அணி சமன் செய்த நிலையில், புள்ளிகள் அடிப்படையில் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி, ஹரிகிருஷ்ணா, விதித் குஜ்ராத்தி ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெற்றி பெற்று தங்கம் வென்றனர்.

கடந்த முறை சென்னையில் நடந்த 44வது செஸ் ஒலிம்பியாட்டில் வெண்கலம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

3-ஆவது முறையாக ஆட்சி; மும்மடங்கு பொறுப்புணர்வுடன் செயல்பாடு – நியூயார்க்கில் பிரதமர் மோடி!

இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் எஸ்றா சற்குணம் காலமானார்!

கடந்த 5 ஆண்டுகளாக திருமலையில்… சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள தகவல்!