செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்வதற்கான நெருக்கத்தில் இந்தியா!

ஹங்கேரி தலைநகா் புடாபெஸ்டில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 193 அணிகள் பங்கேற்கும் ஓபன் பிரிவில் இந்திய அணிகள் அசத்தி வருகின்றன.

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஆடவர் பிரிவில் அமெரிக்காவை வீழ்த்தி முதன்முறையாக தங்கம் வெல்வதற்கான நெருக்கத்தில் இந்தியா உள்ளது.

10வது சுற்றின் முடிவில் இந்தியா 2.5-1.5 என்ற கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தியது.

இந்தியாவின் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியின் வெற்றியாளர் டி குகேஷ், ஃபேபியானோ கருவானாவை 1-0 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றார்.

சென்னையில் அதிகரிக்கும் சுவாசப்பாதை தொற்றுகள்!

முன்னாக, இந்திய ஆடவர் அணி தொடர்ச்சியாக 8 சுற்றுகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில், 9 சுற்றில் டிராவில் முடிந்தது. 10 சுற்று முடிவில் 19 புள்ளிகளுடன் இந்தியா புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இறுதிச் சுற்று நடைபெறவுள்ள நிலையில், முதல் முறையாக ஓபன் பிரிவில் தங்கம் வெல்வதற்கு இந்தியாவிற்கு இன்னும் ஒரு படி மட்டுமே உள்ளது.

Related posts

வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு

மகனை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை… குடும்பத் தகராறில் விபரீதம்

மோடி ஆட்சிதான் காமராஜர் ஆட்சி – தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி