செஸ் ஒலிம்பியாட்: மகளிர் பிரிவிலும் இந்தியா தங்கம் வென்றது!

செஸ் ஒலிம்பியாட் இந்தியா மகளிர் அணியினரும் தங்கம் வென்று அசத்தியுள்ளனர்.

ஹங்கேரி தலைநகா் புடாபெஸ்டில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 193 அணிகள் பங்கேற்கும் ஓபன் பிரிவில் இந்திய அணிகள் அசத்தி வந்தன.

வந்திகா அகர்வால், திவ்யா தேஷ்முக், ஹரிகா, வைஷாலி, தானியா சச்தேவ் ஆகியோர் வெற்றிபெற்ற தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளனர்.

இன்று (செப்டம்பர் 22) நடைபெற்ற இறுதிச் சுற்றுக்கானப் போட்டியில் ஸ்லோவேனியா அணிக்கு எதிரானப் போட்டியில் அஜர்பைஜானை வீழ்த்தி இந்திய அணி தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது.

ஆண்கள் பிரிவில் தங்கம் வென்ற நிலையில், மகளிர் பிரிவிலும் தங்கப்பதக்கத்தை வென்று இந்திய அணியினர் வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.

Related posts

3-ஆவது முறையாக ஆட்சி; மும்மடங்கு பொறுப்புணர்வுடன் செயல்பாடு – நியூயார்க்கில் பிரதமர் மோடி!

இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் எஸ்றா சற்குணம் காலமானார்!

கடந்த 5 ஆண்டுகளாக திருமலையில்… சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள தகவல்!