சேப்பாக்கத்தில் இந்தியா-வங்காளதேசம் டெஸ்ட் போட்டி; நாளை டிக்கெட் விற்பனை

இந்தியா- வங்காளதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 19ம் தேதி சென்னையில் தொடங்குகிறது.

சென்னை,

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 19ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரின் டெஸ்ட் ஆட்டங்கள் சென்னை மற்றும் கான்பூரிலும், டி20 போட்டிகள் குவாலியர், டெல்லி மற்றும் ஐதராபாத்திலும் நடைபெற உள்ளன.

இந்நிலையில் வரும் 19ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் தொடங்க உள்ள முதல் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி முதல் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் நாளை காலை 9.45 மணிக்கு தொடங்கி நடைபெறும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்திருக்கிறது.

https://insider.in என்ற இணையதளத்தின் வாயிலாக டிக்கெட்டுகளை பதிவு செய்து பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டிக்குரிய அனைத்து நாட்களுக்கும் சேர்த்து ரூ.1,000, ரூ.1,250, ரூ.2 ஆயிரம், ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.15 ஆயிரம் ஆகிய விலைகளில் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.

Related posts

சச்சின் 194 ரன்களில் இருந்தபோது டிராவிட் டிக்ளேர் செய்தது ஏன்..? – பின்னணியை பகிர்ந்த ஆகாஷ் சோப்ரா

சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா செல்லவில்லையெனில் பாகிஸ்தானுக்குத்தான் நஷ்டம் – ஆகாஷ் சோப்ரா

அந்த சமயத்தில் ரவி சாஸ்திரி பாட்டு பாடி எங்களுக்கு புத்துணர்ச்சி கொடுத்தார் – அஸ்வின்