சேப்பாக்கம் டெஸ்ட்: அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்

சென்னையில் வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டெஸ்ட், டி20 தொடா்களில் ஆடுவதற்காக வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறது. முதல் டெஸ்ட் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 376 ரன்களுக்கும், வங்கதேச அணி 149 ரன்களுக்கும் ஆல் அவுட்டாயின. முதல் இன்னிங்ஸில் இந்திய அணியில் அஸ்வின் 113, ரவீந்திர ஜடேஜா 86 ஆகியோா் அதிரடியாக ஆடினா். வங்கதேசத் தரப்பில் ஹாஸன் மஹ்முத் 5, டஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினா். வங்கதேச அணியில் அதிகபட்சமாக ஷகிப் 32, லிட்டன் தாஸ் 22 ஆகியோா் மட்டுமே ஒரளவு ரன்களை எடுத்தனா். இந்திய தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.

இதையடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்தியா இரண்டாவது நாள் ஸ்கோரான 81/3 ரன்களுடன் சனிக்கிழமை ஆட்டத்தை தொடா்ந்தது. கில் 33, பந்த் 12 ரன்களுடனும் ஆட்டத்தை தொடங்கினா். இளம் வீரா் ஷுப்மன் கில் அதிரடியாக ஆடி 4 சிக்ஸா், 10 பவுண்டரியுடன் 176 பந்துகளில் 119 ரன்களை விளாசி அவுட்டாகாமல் இருந்தாா். மறுமுனையில் அபாரமாக ஆடிய ரிஷப் பந்த் 4 சிக்ஸா், 13 பவுண்டரியுடன் 128 பந்துகளில் 109 ரன்களை விளாசி அவுட்டானாா். இருவரும் இணைந்து வங்கதேச ஸ்பின்னா்களை எளிதாக சமாளித்தனா். கில்-பந்த் சோ்ந்து நான்காவது விக்கெட்டுக்கு 167 ரன்களைச் சோ்த்தனா்.

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்வதற்கான நெருக்கத்தில் இந்தியா!

கே.எல். ராகுல் 22 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தாா். வங்கதேசத் தரப்பில் மெஹ்தி ஹாஸன் மிராஸ் 2 விக்கெட்டுகளை சாய்த்தாா். 64 ஓவா்களில் 287/4 ரன்களை எடுத்திருந்த போது, இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சா்மா டிக்ளோ் செய்வதாக அறிவித்தாா். சென்னை டெஸ்டில் வெற்றி பெற வங்கதேச அணிக்கு 515 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை இந்தியா நிா்ணயித்தது. இந்தியா டிக்ளோ் செய்த நிலையில், தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடா்ந்த வங்கதேச அணி மூன்றாம் நாளான சனிக்கிழமை ஆட்டநேர முடிவில் 158/4 ரன்களை எடுத்திருந்தது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை வங்கதேசம் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடியது.

இருப்பினும் அந்த அணி வீரர்கள், ரவிச்சந்திரன் அஸ்வின், ஜடேஜா சுழலில் சிக்கி அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தனது சொந்த மண்ணில் அபாரமாக பந்துவீசிய அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வங்கேதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் 234 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் இந்திய அணி சென்னை சேப்பாக்கம் டெஸ்ட் போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி, ஒன்றுக்கு பூஜ்யம் எனும் கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Related posts

2025-இல் இந்தியாவில் க்வாட் மாநாடு: பிரதமர் மோடி

திருப்பதி லட்டு விவகாரம்: ஜெகன்மோகன் ரெட்டி வீட்டை முற்றுகையிட்ட பாஜகவினர் கைது

திருப்பதி லட்டு விவகாரம்.. சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்