சேப்பாக்கம் மைதானத்தில் 300-வது விக்கெட்டை வீழ்த்த நல்ல வாய்ப்பு: ஜடேஜா

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது 300-வது விக்கெட்டை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வீழ்த்த நல்ல வாய்ப்பு கிடைத்திருப்பதாக ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.

முதல் டெஸ்ட்

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (செப்டம்பர் 19) தொடங்கியது.

இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 376 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் அதிகபட்சமாக 113 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, ரவீந்திர ஜடேஜா அதிகபட்சமாக 86 ரன்கள் ரன்கள் எடுத்தார்.

கௌதம் கம்பீர் – விராட் கோலி நேர்காணலை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டோம்: மனோஜ் திவாரி

300-வது விக்கெட்

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 376 ரன்களுக்கு ஆட்டமிழக்க, வங்கதேசம் அதன் முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வங்கதேசம் 149 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியா தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். சிராஜ், ஆகாஷ் தீப் மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் ரவீந்திர ஜடேஜா கைப்பற்றியுள்ள விக்கெட்டுகளின் எண்ணிக்கை 294 ஆக அதிகரித்துள்ளது. 300 விக்கெட்டுகளைக் கைப்பற்ற அவருக்கு இன்னும் 6 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்படுகின்றன.

ஜெய்ஸ்வால், கில்லுக்கு எதிராக திட்டங்களை வகுப்பதே எங்களது நோக்கம்: ஆஸி. வேகப் பந்துவீச்சாளர்

இந்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது 300-வது விக்கெட்டை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வீழ்த்த நல்ல வாய்ப்பு கிடைத்திருப்பதாக ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தின் தொடக்கத்தில் நான் ஆட்டமிழந்தேன். விளையாட்டில் இதெல்லாம் சகஜம். நாங்கள் தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் நல்ல ஸ்கோரை குவிக்க வேண்டும். நான் பந்துவீச்சில் செயல்படும் விதம் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் எனது 300-வது விக்கெட்டை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வீழ்த்துவதற்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார்.

Related posts

வன்முறையைத் தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்: கிரண் ரிஜிஜு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜானி மாஸ்டர்!

பொது சொத்துக்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் துரைமுருகன்