சேலத்தின் சில பகுதிகளில் கேட்ட பயங்கர சத்தம் – பொதுமக்கள் அச்சம்

சேலத்தின் சில பகுதிகளில் கேட்ட பயங்கர சத்தத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

சேலம்,

சேலம் மாவட்டம் ஏற்காடு, குப்பனூர், வாழப்பாடி, அயோத்தியாபட்டணம், ஓமலூர், கருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மதியம் 1 மணியளவில் வெடி வெடிப்பது போன்ற பயங்கர சத்தம் கேட்டது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். நில அதிர்வு காரணமாக சத்தம் ஏற்பட்டதா என பலர் சந்தேகம் தெரிவித்தனர்.

ஆனால் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வானிலை மற்றும் நில அதிர்வு கண்காணிப்பகத்தில் இருக்கும் ரிக்டர் அளவுகோலில் நில அதிர்வுக்கான தரவுகள் எதுவும் பதிவாகவில்லை என்றும், சத்தம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக கடந்த ஆண்டு சேலம் மாவட்டத்தில் நில அதிர்வு உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்திய வளா்ச்சியில் பங்கேற்க வேண்டும்: சா்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு

பிகாா்: புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்தது

பஞ்சாப் அமைச்சரவை மாற்றம்: 4 போ் நீக்கம்; 5 பேருக்கு பதவி