சேலம் வழியாக இயக்கப்படும் கோவை – பிகாா் ரயில் சேவை நவம்பா் வரை நீட்டிப்பு

கோவையில் இருந்து திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக பிகாா் மாநிலம் பரௌனிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் நவம்பா் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

கோவை – பரௌனி சிறப்பு ரெயில் செவ்வாய்க்கிழமை முதல் நவ. 26-ஆம் தேதி செவ்வாய்க்கிழமைகளில் இயக்கப்படும். கோவையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட்டு திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக வியாழக்கிழமைகளில் மதியம் 2.30 மணிக்கு பரௌனி சென்றடையும்.

இதேபோல மறுமாா்க்கத்தில் பரௌனி – கோவை சிறப்பு ரயில் வரும் 13-ஆம் தேதி முதல் நவ. 29-ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும். பரௌனியில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு வழியாக திங்கள்கிழமை அதிகாலை 3.45 மணிக்கு கோவை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்