சொகுசு ஓட்டலின் 20வது மாடியில் இருந்து குதித்து தொழிலதிபர் தற்கொலை

சொகுசு ஓட்டலின் 20வது மாடியில் இருந்து குதித்து தொழிலதிபர் தற்கொலை செய்துள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஜேம்ஸ் மைக்கெல் சிலின் (வயது 64). இவர் 2000ம் ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் தியேட்டர்களில் டிக்கெட் புக் செய்யும் நிறுவனத்தை தொடங்கி நடத்தி வந்தார். அதன்பின்னர், பல்வேறு புதிய தொழில்களை தொடங்கி நிறுவனங்களை நடத்தி வந்தார்.

இதனிடையே, தொழிலதிபர் ஜேம்ஸ் மைக்கெல் சிலின் நியூயார்க் மாகாணம் மேன்ஹட்டன் நகரில் உள்ள சொகுசு ஓட்டலில் தங்கி இருந்தார்.

இந்நிலையில், தான் தங்கி இருந்த சொகுசு ஓட்டலின் 20வது மாடியில் இருந்து கீழே குதித்து ஜேம்ஸ் மைக்கெல் சிலின் நேற்று தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், ஜேம்சின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

அமெரிக்க வாக்காளர்களிடம் கமலா ஹாரிசுக்கு அதிகரிக்கும் ஆதரவு – கருத்துக்கணிப்பில் புதிய தகவல்

சிந்து நதி நீர் ஒப்பந்த மறு ஆய்வு.. இந்தியாவின் நோட்டீசுக்கு பாகிஸ்தான் பதில்

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்