சோனியா, ராகுலை சந்தித்த சுயேச்சை எம்.பி., – சதமடித்த காங்கிரஸ்!

சோனியா, ராகுலை சந்தித்த சுயேச்சை எம்.பி., – சதமடித்த காங்கிரஸ்!

விஷால் பாட்டீல்

மகாராஷ்டிராவில் சாங்கிலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சுயேச்சை எம்.பி. விஷால் பாட்டில், காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டார்.

மகாராஷ்டிராவில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, சரத்பாவரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து, மகா விகாஸ் அகாதி என்ற கூட்டணியை அமைத்து போட்டியிட்டன. அப்போது, சாங்கிலி தொகுதியை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கேட்டு வந்தது. ஆனால், கடந்த தேர்தலில் அங்கு காங்கிரஸ் போட்டியிடாத காரணத்தை சுட்டிக்காட்டி, அந்த தொகுதியை சிவசேனா தரமறுத்தது.

சாங்கிலி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்தால், அதில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்பியிருந்த விஷால் பாட்டீல் ஏமாற்றம் அடைந்தார். இவரது தாத்தா வசந்ததாதா பாட்டீல், மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ் முதலமைச்சராக இருந்தவர். அத்துடன் விஷால் பாட்டீலின் தந்தை பிரகாஷ்பாபு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யாகவும், இவரது தாயார் ஷைலஜா மாநில மகிளா காங்கிரஸ் தலைவராகவும் இருந்தவர்கள். அத்துடன் இவரது இளைய சகோதரர் பிரதிக், காங்கிரஸ் ஆட்சியில் மத்திய நிலக்கரித்துறை இணை அமைச்சராக இருந்தவர். இவ்வாறு காங்கிரஸ் பாரம்பரியத்தைச் சேர்ந்த விஷால் பாட்டீல் நடந்து முடிந்த தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டார்.

விளம்பரம்

அதில், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா வேட்பாளர் மற்றும் அந்த தொகுதியில் சிட்டிங் எம்.பி.யாக இருந்த பாஜகவின் சாஞ்சய்காகா பாட்டீல் ஆகியோரை வீழ்த்தி வெற்றிபெற்றார். இதையடுத்து, டெல்லி சென்ற விஷால் பாட்டீல், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து, காங்கிரஸ் கட்சியில் தன்னை மீண்டும் சேர்த்துக் கொள்ளுமாறு கடிதம் அளித்தார். அதற்கு ஒப்புதல் கிடைத்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரையும் சந்தித்தார்.

இதையும் படிங்க:
ரூ.36,000 கோடியுடன் தலைமறைவான பெண் மல்லையா – யார் இவர் தெரியுமா?

விளம்பரம்

மகாராஷ்டிராவின் சாங்கிலி தொகுதியில் வெற்றிபெற்ற விஷால் பாட்டீல் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததன் மூலம், காங்கிரஸ் கட்சி எம்.பி.க்களின் எண்ணிக்கை 100ஐ எட்டியுள்ளது. இதனிடையே, மேலும் சில சுயேச்சை எம்.பி.க்களை தங்கள் பக்கம் இழுக்க காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அதேபோல், பாஜகவும் பேசிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Lok Sabha Election Results 2024

Related posts

2016 ஜூன் 15 கொல்லம் கலெக்டர் அலுவலக குண்டு வெடிப்பு: மதுரையை சேர்ந்த மூவர் குற்றவாளிகள்

ஆன்லைனில் கட்டிட அனுமதியை விரைவாக வழங்க வழிகாட்டுதல்: 30 நாளில் உத்தேச தடையின்மை சான்று

ரூ.158 கோடியில் தொழில்நுட்ப கட்டிடம்: கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்