ஜப்பான் துயரம்: 6 மாதங்களில் வீட்டில் சடலமாகக் கிடந்த 40,000 பேர்; அதிலும் 138 பேர்..?

ஜப்பானில் 2024ஆம் ஆண்டில் மட்டும் 40,000 பேர் வீட்டிலேயே இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக அந்த நாட்டின் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதில், 4,000 பேர் உயிரிழந்த ஒரு மாதத்துக்கு பிறகும், 130 பேர் உயிரிழந்த ஓராண்டுக்கு பிறகும் சடலமாக வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

ஐ.நா.வின் தரவுகளின்படி, உலகிலேயே மக்கள்தொகையில் அதிகளவில் வயதானவர்களை கொண்ட நாடாக ஜப்பான் உள்ளது. இதன்காரணமாக, கவனிக்க ஆளில்லாமல் தனிமையில் வாழும் முதியவர்கள் வீட்டிலேயே உயிரிழக்கும் நிலை அதிகரித்துள்ளது.

இதிலும் முறைகேடா? டாப் ரேங்க் எடுத்த காவல்துறை பயிற்சி எஸ்ஐ! மறுதேர்வில்..

ஜப்பான் காவல்துறை அறிக்கை

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும், வீட்டில் தனியாக வசித்து வந்த 37,227 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இதில், 65 வயதுக்கு அதிகமானோர் மட்டும் 70 சதவிகிதம் பேர்.

85 வயதுக்கு அதிகமானோர் 7,498 பேர், 75 முதல் 79 வயதுடையவர்கள் 5,920 பேர், 70 முதல் 74 வயதுடையவர்கள் 5,635 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 40 சதவிகிதம் பேரின் சடங்கள் மட்டுமே அங்கம்பக்கத்தினர் அளிக்கும் தகவலை தொடர்ந்து, ஒரே நாளில் மீட்கப்பட்டுள்ளது.

மேலும், 3,939 சடலங்கள் ஒரு மாதத்துக்கு பிறகும், 130 சடலங்கள் அழுகிய நிலையில் ஓராண்டுக்கு பிறகும் மீட்கப்பட்டுள்ளது.

தள்ளிப்போகிறதா தவெக மாநாடு? அனுமதி கிடைப்பதில் சிக்கல்?

தேசிய மக்கள்தொகை தரவுகள்

ஜப்பானின் தேசிய மக்கள்தொகை மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம், இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிட்ட ஆய்வு முடிவில், 2050ஆம் ஆண்டு அந்த நாட்டில் தனியாக வசிக்கும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை 1.8 கோடியை எட்டும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும், நாட்டில் வாழும் ஒரு நபர் குடும்பங்களின் எண்ணிக்கை 2.3 கோடியை எட்டும் என்று மதிப்பிட்டுள்ளது.

ஜப்பான் மட்டுமின்றி அதன் அண்டை நாடுகளும் அதிகளவில் வயதானவர்களை கொண்ட நாடாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!