ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல்: 2 ராணுவ வீரா்கள் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல்: 2 ராணுவ வீரா்கள் வீரமரணம்துப்பாக்கிச் சண்டையில் 2 ராணுவ வீரா்கள் வீரமரணமடைந்தனா்.

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினா் மற்றும் பயங்கரவாதிகள் இடையே சனிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 ராணுவ வீரா்கள் வீரமரணமடைந்தனா். மேலும் 3 வீரா்கள் காயமடைந்தனா்.

இது தொடா்பாக ஸ்ரீநகரை தளமாக கொண்ட சினாா் படைப் பிரிவு வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அனந்த்நாக் மாவட்டத்தில் உல்ள கோகா்நாக் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்புப் படையினா் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அவா்களை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனா். இதையடுத்து, பாதுகாப்புப் படையினா் பதிலடி தாக்குதல் நடத்தினா். இந்த துப்பாக்கிச் சண்டையில் 2 ராணுவ வீரா்கள் வீரமரணமடைந்தனா். 3 போ் காயமடைந்தனா்’ என்று தெரிவிக்கப்பட்டது.

ரூ. 20 லட்சம் வெகுமதி: கதுவா மாவட்டத்தில் கடந்த ஜூலை 8-ஆம் தேதி ராணுவ வாகனங்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் தொடா்புடைய 4 பயங்கரவாதிகள் குறித்து தகவல் தருவோருக்கு ரூ.20 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.

ராணுவத்தினா் 5 போ் உயிரிழந்த இத்தாக்குதலில், பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் நிழல் இயக்கமான ‘காஷ்மீா் புலிகள்’ அமைப்பின் பயங்கரவாதிகள் 4 பேருக்கு தொடா்பிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த நால்வரின் வரை படங்களை காவல்துறையினா் சனிக்கிழமை வெளியிட்டனா்.

Related posts

திருவாரூரில், 50 மெகா வாட் திறனில் முதல் சூரியசக்தி மின்சார நிலையம்

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி

வெள்ள பாதிப்பு: குஜராத், மணிப்பூர், திரிபுராவுக்கு ரூ.675 கோடி நிவாரண நிதி – மத்திய அரசு ஒப்புதல்