ஜம்மு-காஷ்மீரில் பயங்கர தீ விபத்து: ஒருவர் காயம், ஏழு வீடுகள் எரிந்து நாசம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கர தீ விபத்து: ஒருவர் காயம், ஏழு வீடுகள் எரிந்து நாசம்ஹந்த்வாராவில் தீ: 7 வீடுகள் நாசம், 7 பசுக்கள் உயிரிழப்புphoto courtesy (Jkupdate youtube)

ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 வீடுகள் எரிந்து நாசமானதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் ஹந்த்வாரா பகுதியில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ, வேகமாக அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவியது.

நிகழ்விடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், போலீஸ், இராணுவம் மற்றும் உள்ளூர்வாசிகளின் உதவியுடன் தீயை அணைக்க முயன்றனர்.

ஆனால் தீயை கட்டுப்படுத்துவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 7 வீடுகள் மற்றும் இரண்டு மாட்டு தொழுவங்கள் எரிந்து நாசமாயின.

ஏழு பசுக்களும் தீயில் கருகி உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினர். தீயை அணைக்கும் பணியில் பொதுமக்கள் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.

தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டு வருவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Related posts

மும்பை: பாலியல் பலாத்கார குற்றவாளி போலீசாருடனான துப்பாக்கி சூட்டில் பலி

பலாத்காரத்திற்கு ஆளான மகளை 2 மகன்களுடன் சேர்ந்து பெற்ற தாயே தீர்த்து கட்டிய கொடூரம்

ஜம்மு காஷ்மீர் தேர்தல் – வாக்குறுதிகளை அறிவித்த ராகுல் காந்தி