ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சியமைக்கும்: மோடி

ஜம்மு-காஷ்மீரில் தனிப் பெரும்பான்மையுடன் பாஜக அமைக்கவுள்ளதாக பிரதமர் மோடி பிரசாரத்தில் கூறியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில், அக். 1 ஆம் தேதியில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. இந்த நிலையில், பாஜகவுக்கு வாக்குகள் சேகரிப்பதற்காக எம்.ஏ. திடலில் பாஜக மாபெரும் பிரசாரம் நடத்தியது. இந்த பிரசாரத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.

பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது “நான் ஜம்முவுக்கு வரும்போது மிகுந்த தேசபக்தியை உணர்ந்தேன். ஜம்மு-காஷ்மீரில் தேர்தலுக்கான என்னுடைய கடைசி பிரசாரம் இதுதான். தேசிய மாநாடு கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளால் ஜம்மு-காஷ்மீர் மக்கள் சோர்வடைந்துள்ளனர்.

ஊழல், பயங்கரவாதம், குருதிக்களமாக இருந்த அவர்களின் ஆட்சியை, இங்குள்ள மக்கள் இனி விரும்பவில்லை; மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு அமைதி மற்றும் சிறந்த எதிர்காலத்தைதான் விரும்புகிறார்கள். அதனால்தான் ஜம்மு-காஷ்மீர் மக்கள் இங்கு பாஜக அரசை வெற்றிபெற வைக்க விரும்புகிறார்கள்.

जम्मू के लोगों का स्नेह अद्वितीय है। भाजपा क्षेत्र की उन्नति, सुशासन और समृद्धि के लिए प्रतिबद्ध है। https://t.co/hJlB0GHxJ1

— Narendra Modi (@narendramodi) September 28, 2024

இதுவரையில், ஜம்மு மக்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. முதல்முறையாக, மக்கள் விரும்பும் அரசு ஜம்முவில் அமையவிருக்கிறது. இந்த வாய்ப்பை விட்டுவிடாதீர்கள். தேர்தலுக்குப் பிறகு, ஜம்மு-காஷ்மீரில் முதல்முறையாக முழு பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியை அமைக்கும். ஜம்மு பலவித பாகுபாட்டை சந்தித்துள்ளது; அந்த பாகுபாட்டையெல்லாம் பாஜக அகற்றும்’’ என்று தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து வரும் நிலையில், பிரதமர் மோடி நான்காவது முறையாக இன்று பிரசாரத்தில் பங்கேற்றார்.

இரண்டு கட்டங்கள் முடிந்த நிலையில், அக். 1 ஆம் தேதியில் மூன்றாவது கட்டமாக ஜம்மு, சம்பா, கத்துவா மற்றும் உதம்பூர் மாவட்டங்களில் தேர்தல் நடக்கவுள்ளது.

இந்த 4 மாவட்டங்களில் பாஜக சார்பில் 24 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அக். 8 ஆம் தேதியில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.

ரயில்வே அமைச்சர் வெளியிட்ட வந்தேபாரத் விடியோவில் பெரு நாட்டின் ரயில்! வைரலானதும் பதிவை நீக்கினார்! ஆனால்..

Related posts

திருவாரூரில், 50 மெகா வாட் திறனில் முதல் சூரியசக்தி மின்சார நிலையம்

Actor Rajinikanth, 73, has been admitted to Apollo Hospitals

National Testing Agency Set To Announce Results For UGC NET June 2024; Steps To View