ஜம்மு-காஷ்மீரில் மாநில அந்தஸ்து பெறுவதைக் காங்கிரஸ் உறுதி செய்யும்: கார்கே

ஜம்மு-காஷ்மீரின் உரிமைகளுக்கு காங்கிரஸ் கட்சி உத்தரவாதம் அளிப்பதாகவும், முழு அளவிலான மாநில அந்தஸ்தை மீண்டும் பெறுவதை உறுதி செய்வதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

மனீஷ் சிசோடியாவின் அழுத்தத்தால் அதிஷி தேர்வு: பாஜக

இதுதொடர்பாக கார்கேவின் எக்ஸ் பதிவில்,

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் வாக்குறுதியளித்த ஏழு உத்தரவாதங்களைப் பகிர்ந்த அவர், ஒரு லட்சம் அரசு வேலைகளை நிரப்புவதன் மூலம் கட்சி இளைஞர்களுக்கு புதிய ஆற்றலைக் கொடுக்கும்.

ஜம்மு-காஷ்மீரின் உரிமைகளுக்கு காங்கிரஸ் உத்தரவாதம் அளிக்கிறது. மேலும் முழு அளவிலான மாநில அந்தஸ்தைப் பெறுவோம் என்று இந்தியில் பதிவிட்டுள்ளார்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.25 லட்சம் வரை இலவச சிகிச்சை மற்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்நோக்கு மருத்துவமனையும் திறக்கப்படும். இதன் மூலம் ஆரோக்னிகயமான சமுதாயம் உருவாகும்.

டாக்டர் மன்மோகன் சிங்கின் காஷ்மீர் பண்டிட்டுகளின் மறுவாழ்வுத் திட்டம் விரிவுபடுத்தப்படும். ஓபிசி வகுப்பினரின் அரசியலமைப்பு அடிப்படையிலான உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று கார்கே கூறினார்.

மோடி பிறந்தநாள்: 5 ஆண்டுகளாக கொண்டாடப்பட்டது எப்படி?

பெண் குடும்பத் தலைவர்களுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும். 11 கிலோ தானியத்துடன் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் உணவுப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

திங்கள்கிழமை வெளியிடப்பட்ட ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையில், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான நலத்திட்டங்கள் குறித்து காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.

அறிக்கையின் சிறப்பம்சம்..

ஸ்ரீநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஏஐசிசி ஊடக மற்றும் விளம்பரத் துறைத் தலைவர் பவன் கேரா மற்றும் பிசிசி தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

இயற்கை பேரிடர்களுக்கு எதிரான அனைத்து பயிர்களுக்கும் காப்பீடு மற்றும் ஆப்பிளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை கிலோவுக்கு ரூ.72 வரை வழங்கப்படும். நிலமற்ற குத்தகைதாரர் மற்றும் நிலம் வைத்திருக்கும் விவசாயக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் கூடுதல் நிதியுதவி வழங்கப்படும். அரசு நிலத்தில் பயிரிடும் நிலமற்ற விவசாயிகளுக்கு 99 ஆண்டுக் குத்தகைக்கு ஏற்பாடு செய்வோம்.

ஜம்மு காஷ்மீர் விவசாயிகளுக்கு 100 சதவீத நீர்ப்பாசனத்தை உறுதி செய்யும் வகையில் அனைத்து மாவட்ட அளவிலான நீர்ப்பாசன திட்டங்களுக்கும் ரூ.2,500 கோடி நிதி அமைக்கப்படும் என்றார்.

ஜம்மு-காஷ்மீருக்கு புதிய விடியல் கிடைக்கும். காங்கிரஸ் காயங்களை ஆற்றும் என்று கேரா கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்