ஜம்மு-காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டரில் 4.8 ஆக பதிவு

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரில் இன்று காலை அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. முதல் நிலநடுக்கம் 4.7 ரிக்டர் அளவிலும், 2 வது 4.8 ரிக்டர் ஆகவும் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கங்களால் பீதியடைந்த மக்கள், வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

பாரமுல்லாவை மையமாக கொண்ட இந்த நிலநடுக்கமானது 5 மற்றும் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் பீதியை ஏற்படுத்திய நிலநடுக்கத்தில் எந்த சேதமும் ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.

Related posts

கோடியக்கரை அருகே கடலில் தவறி விழுந்த தரங்கம்பாடி மீனவர் மாயம்

“நீர்நிலைகளை தனியாருக்கு தாரைவார்ப்பதா?” – தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம் 

நடிகர் விஜய்யை அதிமுகவினர் யாரும் விமர்சிக்க வேண்டாம்: நிர்வாகிகளுக்கு பழனிசாமி அறிவுறுத்தியதாக தகவல்