ஜம்மு-காஷ்மீரில் முதல் வெற்றியைப் பதிவு செய்த ஆம் ஆத்மி!

ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் ஒரு தொகுதியில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பின், 90 பேரவைத் தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக (செப். 18, 25, அக்.1) தேர்தல் நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று(அக். 8) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதன்படி, ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி(இந்தியா கூட்டணி) ஆட்சி அமைக்கிறது.

தற்போதைய நிலவரப்படி, ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி 42 தொகுதிகளிலும் காங்கிரஸ் 6 தொகுதிகளிலும், பாஜக – 29, மக்கள் ஜனநாயகக் கட்சி – 3, ஆம் ஆத்மி – 1, இதர – 7 தொகுதிகளிலும் முன்னிலை பெற்று வருகிறது.

இதையும் படிக்க | வெற்றி பெற்றார் வினேஷ் போகத்!

இதில் தோடா பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மெஹ்ராஜ் மாலிக், பாஜக வேட்பாளரைவிட 4,538 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

மெஹ்ராஜ் மாலிக் – 23, 228, பாஜகவின் கஜய் சிங் – 18,690, தேசிய மாநாட்டுக் கட்சியின் காலித் நஜிப் – 13,334 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இதையடுத்து ஜம்மு- காஷ்மீரில் ஆம் ஆத்மி கட்சி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

ஹரியாணா தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்ட ஆம் ஆத்மி அங்கு ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மனைவிக்காக 25 ஆண்டுகளாக உண்ணா நோன்பிருக்கும் பாஜக எம்.பி.!

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு!

எனக்கு உந்துசக்தி தங்கை துளசிமதிதான்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்