ஜம்மு காஷ்மீரில் ராகுல் கொடுத்த வாக்குறுதி; உடைத்து பேசிய அமித்ஷா

மத்திய அரசால் மட்டுமே ஜம்மு காஷ்மிருக்கு மாநில அந்தஸ்து வழங்க முடியும் – அமித்ஷா

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்கு பிறகு மாநில அந்தஸ்தும் நீக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் ஜம்மு காஷ்மீருக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ், சி.பி.எம். உள்ளிட்ட கட்சிகள் ஒரு கூட்டணியில் உள்ளன. ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியும், பா.ஜ.கவும் தனித்து போட்டியிடுகின்றன. சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கு பிறகு நடைபெறும் முதல் சட்டமன்றத் தேர்தல் என்பதால் ஜம்மு காஷ்மீர் தேர்தல் இந்தியா முழுவதும் கவனம் பெற்றுள்ளது.

விளம்பரம்

90 தொகுதிகள் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்திற்கு செப். 18, செப். 25 மற்றும் அக். 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகின்றன. வாக்கு எண்ணிக்கை அக். 8ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி, கடந்த செப். 4ம் தேதி அனந்தநாக் மாவட்டத்தின், தூரு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அங்கு பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை பெறுவதே நமது கடமை. அது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்றும் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்றும் பேசியிருந்தார்.

விளம்பரம்

இதையும் படியுங்கள் :
“வாய்ப்பு கிடைக்கல..” – கண்ணீர்விட்டு அழுத பா.ஜ.க முன்னாள் எம்.எல்.ஏ.! – வைரலாகும் வீடியோ!

இந்நிலையில் இரண்டு நாள் பயணமாக நேற்று (6ம் தேதி) ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்று பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து இன்று அங்கு நடைபெற்ற பொதுக்கூடத்தில் கலந்துக்கொண்டு பேசினார். அந்தக் கூட்டத்தில் பேசிய அவர், “ஜம்மு காஷ்மீரில் நடக்க இருக்கிற சட்டப்பேரவைத் தேர்தல் வரலாற்று சிறப்புமிக்கது. ஏனென்றால் முந்தைய நடைமுறையான இரண்டு தேசியக் கொடி இரண்டு அரசியல் அமைப்பு போல் இல்லாமல் சுந்தந்திரத்திற்கு பின்னர் தேசியக் கொடி மற்றும் அரசியல் அமைப்பின் கீழ் தேர்தல் நடைபெற இருக்கிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நமக்கு பிரதமர் மோடி ஒருவரே பிரதமர்.

விளம்பரம்

பல ஆண்டுகளுக்குப் பிறகு அமர்நாத் யாத்திரை அமைதியாக நடைபெறுகிறது. அதேபோல், 10 ஆண்டுகளில் பயங்கரவாதம் 70 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசால் மட்டுமே, ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து தர முடியும்” என்று பேசினார்.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
BJP
,
Congress
,
Jammu and Kashmir

Related posts

இந்தியாவின் கடல்சார் வளர்ச்சியில் புதிய அத்தியாயத்தை எழுத வ.உ.சி துறைமுகம் தயாராக உள்ளது – பிரதமர் மோடி

விஷ சாராய வழக்கு: மேலும் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

மெட்ரோ ரெயிலில் பயணித்த பிரதமர் மோடி