ஜம்மு காஷ்மீரில் 3 கட்டங்களாக தேர்தல்- தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஜம்மு காஷ்மீர் மற்றும் அரியானா மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1-ம் தேதி என 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல் அரியானாவில் ஒரே கட்டமாக அக்டோபர் 1-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

மேலும் இரு மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை ஒரே நாளில் அதாவது அக்டோபர் 4-ம் தேதி நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையர் தெரிவித்தார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்